இறுதி ஒருநாள் போட்டியில் மிரட்டும் இலங்கை வேகப்புயல்கள்! அடுத்தடுத்து சரிந்த ஆப்கான் விக்கெட்டுகள்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 ஓவர்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடவில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்கள் குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான் களமிறங்கினர். காயத்தினால் கடந்த போட்டியில் விளையாடாத இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே பந்துவீசினார்.
ACBofficials (Twitter)
இரண்டு பவுண்டரிகள் விளாசிய அதிரடியாக இன்னிங்சை ஆரம்பித்த குர்பாஸை, தனது முதல் ஓவரிலேயே 8 ஓட்டங்களில் லஹிரு வெளியேற்றினார்.
ICC
அடுத்தடுத்து சரிந்த முக்கிய விக்கெட்டுகள்
அதன் பின்னர் வந்த ரஹ்மத் ஷா 7 ஓட்டங்களிலும், கேப்டன் ஷாஹிடி 4 ஓட்டங்களிலும் சமீரா பந்துவீச்சில் குசால் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
ACBofficials (Twitter)
பவுண்டரிகளை விரட்டி நெருக்கடி கொடுத்த இப்ராஹிம் ஜட்ரானை 22 (21) ஓட்டங்களில் லஹிரு குமார போல்டாக்கினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்களுக்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
தற்போது வரை ஆப்கான் அணி 10 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்துள்ளது. நபி மற்றும் நஜிபுல்லா ஜட்ரான் களத்தில் உள்ளனர்.
ACBofficials (Twitter)