கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்! அது நடந்தால் தான் விளையாடுவேன்..இளம் வீரரின் ஓய்வு முடிவால் பரபரப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள ஊழல் தலைமை தன்னை ஓய்வு எடுக்க வைத்துள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் வீரர் உஸ்மான் கனி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலகல் அறிக்கை
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் உஸ்மான் கனி (26) தமது கிரிக்கெட் வாரியத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
getty images
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கவனமாக பரிசீலித்த பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள ஊழல் தலைமை என்னை பின்வாங்க வைத்துள்ளது. நான் எனது கடின உழைப்பைத் தொடர்வேன், சரியான நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு அமைக்கப்படும் என ஆவலுடன் காத்திருப்பேன்.
அது நடந்தவுடன் நான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவேன். அதுவரை, என் அன்பான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து என்னை ஆதரிக்கிறேன்.
பலமுறை சென்றும் தலைவர் கிடைக்காததால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. மேலும், அனைத்து வடிவங்களில் இருந்தும் என்னை விலக்கியதற்கு தலைமை தேர்வாளரிடம் திருப்திகரமான பதில் இல்லை' என தெரிவித்துள்ளார்.
[
இளம் வீரர்
35 டி20 போட்டிகள் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள உஸ்மான் கனி 1221 ஓட்டங்கள் சர்வதேச போட்டிகளில் எடுத்துள்ளார்.
26 வயது இளம் வீரரான இவரின் இந்த அறிக்கை கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |