பிரித்தானியாவில் பெண்களிடம் மோசமாக நடந்துகொண்ட புகலிடக் கோரிக்கையாளர்: குற்றவாளி என நிரூபணம்
பிரித்தானியாவில் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், பெண்களிடம் அத்துமீறிய குற்றச்சாட்டினால் நீதிமன்ற விசாரணையில் உள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான ஷஃபியுல்லா ரசூலி (Shafiullah Rasooli) என்ற நபர் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்தார். 
அவர் தனது நண்பரின் பதிவு விவரங்களைப் பயன்படுத்தி கென்ட்டின் மெய்ட்ஸ்டோன் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் பணியை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் கடந்த ஜூலை மாதத்தில் தனது வாடிக்கையாளர் பெண்கள் இருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூன்று பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ரசூலி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
குற்றவாளி
அப்போது அவர் தனது குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது சொந்த நாட்டில் விடைபெறுவதற்கான ஒரு பொதுவான முறைதான் பக்கவாட்டில் கட்டிப்பிடிப்பது என்று கூறினார்.
எனினும் அக்டோபர் 1ஆம் திகதி Sevenoaks மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரசூலி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தண்டனைக்கு முந்தைய அறிக்கை முடியும் வரை ரசூலியை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவர் மீதான விசாரணைக்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |