இந்திய அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஆப்கான் கேப்டன்
ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
போராடி காப்பாற்றிய ஷாஹிடி
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி பிரசித் கிருஷ்ணாவின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது.
36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் என தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியை ஹஷ்மதுல்லா ஷாஹிடி போராடி காப்பாற்றினார்.

அவருக்கு உறுதுணையாக ஆடிய அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் சதம்
நிதானமாக ஓட்டங்களை சேர்த்த அணித்தலைவர் ஹஷ்மதுல்லா ஷாஹிடி (Hashmatullah Shahidi) 131 பந்துகளில் 102 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 13 பவுண்டரிகள்) எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஷாஹிடியின் முதல் சதம் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளும், குர்நூர், ப்ரின்ஸ் யாதவ் மற்றும் ஹர்ஷ் தூபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் அனுபவ வீரர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஹாட்ரிக் கேட்சுகள் பிடித்து அசத்தினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |