200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! டி20யை இழந்ததற்கு வங்காளதேசத்தை பழிதீர்த்த ஆப்கான்
வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இப்ராஹிம் ஜட்ரான் 95 ஓட்டங்கள்
அபுதாபியின் ஷேய்க் ஸயெத் மைதானத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
What a terrific performance by Bilal Sami! 🙌
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 14, 2025
A maiden five-wicket haul for Bilal Sami, who was a massive contributor to Afghanistan's victory in the third and final ODI match of the series. 👏#AfghanAtalan | #AFGvBAN2025 | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/pOKirEJywT
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 293 ஓட்டங்கள் குவித்தது. இப்ராஹிம் ஜட்ரான் 95 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய வங்காளதேசம் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
டி20 தொடரை இழந்திருந்த ஆப்கானிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று தரமான பதிலடி கொடுத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |