வாழ வேறு வழியில்லை.. பெற்ற பச்சிளம் குழந்தையை விற்கும் ஆப்கனியர்! நெஞ்சை உருக்கும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் வாழ வழியில்லாததால் தந்தை ஒருவர் பெற்ற பச்சிளம் குழந்தையை விற்பதாக காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, நாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டிற்கு வழங்கி வந்த உதவிகளை ஐ.நா உட்பட பல நாடுகள் நிறுத்தியது.
ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்த தலிபான்கள், சர்வதேச சமூகம் தங்களது அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், விலைவாசி அதிகரிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மக்களின் நிலைமை வெளிகாட்டும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வீடியோவில், பொதுவெளியில் தந்தை ஒருவர் பச்சிளம் குழந்தையை ஏந்திய படி நிற்கிறார், அவருக்கு அருகே மனைவி சாலையில் அமர்ந்திருக்க மற்ற குழந்தைகள் நிற்கின்றனர்.
Afghans Fed up with the situation. Reportedly, one person is selling his children& complaining that Taliban has left nothing in his province & he has no other option but to sell his children. pic.twitter.com/8zeE0feBum
— Ihtesham Afghan (@IhteshamAfghan) September 22, 2021
தாலிபான் தனது மாகாணத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை, தனது குழந்தைகளை விற்பதை தவிர வேறு வழியில்லை என தந்தை வேதனையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த வீடியோவின் உண்மை தன்மை தெரியவில்லை.