ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்! தாலிபானுக்கு எதிராக எழுந்த முதல் குரல்.. யார் சொன்னது தெரியுமா?
தாலிபான்கள் என்ன தீங்கு இழைத்தாலும் அவர்களிடம் நான் சரண் அடைய மாட்டேன் என்று ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே உறுதியாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
நேற்று ஆப்கானின் வடகிழக்கில் உள்ள இந்துகுஷ் பகுதியில் தாலிபான் எதிர்ப்புத் தலைவர் அகமது ஷா மசூத் மற்றும் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் தாலிபான்களுக்கு எதிராக முதல் குரலை முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே கொடுத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தலிப்பான்கள் என்ன தீங்கு செய்தாலும் எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு தலைவணங்க மாட்டேன் என்றும் அப்படி செய்தால் என்னை நம்பி இருக்கும் மக்கள் மற்றும் தலைவர் அகமது ஷா மசூதினுக்கு நான் செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார்.
I will never, ever & under no circumstances bow to d Talib terrorists. I will never betray d soul & legacy of my hero Ahmad Shah Masoud, the commander, the legend & the guide. I won't dis-appoint millions who listened to me. I will never be under one ceiling with Taliban. NEVER.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 15, 2021
1990ஆம் ஆண்டுகளில் தாலிபான் கைகள் ஓங்கிருந்த பொழுது அவர்களால் பாஞ்ஷிர் என்னும் போராளிகள் கோட்டையை கவர முடியாத வண்ணம் அகமது ஷா மசூத் காத்து வந்தார். சாலே அந்த கோட்டையில் இருந்து வந்தவர் என்பதால் அவரும் தாலிபான்களை எதிர்த்து போராடினார்.
1996ஆம் ஆண்டு தாலிபான் ஆப்கனை கைப்பற்றிய பொழுது அங்கிருந்து தப்பிவிட்டார். ஆனால் தாலிபான்கள் அவரின் சகோதரியை கைது செய்து கொடூரமாக கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
2001ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் தாலிபான்களை வேட்டையாட நினைத்த பொழுது தாலிபான்களின் தலைவர்களைக் கண்டறிய பேருதவியாக அம்ருல்லா சாலே விளங்கினார். அதுமட்டும் இல்லாமல் பாகிஸ்தான் அரசு தாலிபான்களுக்கு உதவியாக இருந்ததையும் அவர் தான் கண்டுபிடித்தார்.
இதனால் சாலேவை தாலிபான்கள் வெறி கொண்டு கொலை செய்ய தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் சாலேவை அழிக்க தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆனால் அதிலிருந்து உயிர் தப்பிய சாலே அடுத்த சில மணி நேரத்திலே தாலிபான்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தார்.