நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்! தாலிபான்களை எதிர்த்து தைரியமாக கேள்விக்கேட்ட ஆப்கான் சிறுமி.. வைரலாகும் வீடியோ
ஆப்கான் சிறுமி ஒருவர் தாலிபான்களுக்கு எதிராக ஆவேசமாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர்.
இந்த நாட்டில் வழக்கம் போல் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்யகூடாது. பெண்கள் படிக்க பள்ளிக்கு செல்ல கூடாது என்று அடுக்கடுக்கான கட்டளைகளை பயங்கரவாதிகள் அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கான் நாட்டை சேர்ந்த சிறுமி தாலிபான்களுக்கு எதிராக பேசும் வீடியோ காட்சியை அந்நாட்டு ஊடகவியலாளரான பிலால் சர்வாரி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
“I want to go to school.” Powerful message from this eloquent Afghan girl. pic.twitter.com/PdAMtg9Fjm
— BILAL SARWARY (@bsarwary) September 22, 2021
அந்த வீடியோவில், நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். மூன்று வேளையும் சாப்பிட்டு வீட்டிலே இருக்க நான் பிறக்கவில்லை.
பெண்கள் கல்வி கற்கவில்லை என்றால் எப்படி நாடு வளர முடியும்? என்று ஆவேசமாக பல கேள்விகளை அந்த சிறுமி தாலிபான்களுக்கு எதிராக கேட்டுள்ளார். இந்த சிறுமி கேட்ட கேள்விகளுக்கு தாலிபான்கள் விடையளிப்பார்களா என்று அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.