ஜேர்மனியில் 2 வயது குழந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஆப்கான் நபர்: இன்று விசாரணை
ஜேர்மனியில் இரண்டு வயது குழந்தை மற்றும் நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் நபர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கத்தியால் தாக்கிய நபர்
பவேரிய நகரத்தில் உள்ள ஒரு பூங்காவில், மழலையர் பாடசாலையைச் சேர்ந்த 5 குழந்தைகள் ஆசிரியர்களுடன் அமர்ந்திருந்தபோது நபர் ஒரு கத்தியால் தாக்கினார்.
இதில் இரண்டு வயது சிரிய சிறுமி மற்றும் ஆசிரியர்களில் ஒருவரும், குழந்தைகளைப் பாதுகாக்க முயன்ற 72 வயது நபரும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்று பின்னர் தெரிய வந்தது.
ஜேர்மன் நீதித்துறையின் வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப, 28 வயதான சந்தேக நபர் எனாமுல்லா ஓ என பெயரிடப்பட்டுள்ளார்.
இன்று விசாரணை
அவருக்கு நீண்ட மனநோய் வரலாறு உள்ளது என்றும், அவரது மனநல நிலை என்பது அவர் குற்றவியல் ரீதியாக பொறுப்பல்ல என்றும் நிபுணர் மதிப்பீடு முடிவு செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர் பயங்கரவாத நோக்கத்திற்காக செயல்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என்றும், அவரை நிரந்தரமாக ஒரு மனநல மருத்துவமனையில் அடைத்து வைக்க முயற்சிப்பதாகவும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிறுவர் குழுவைத் தாக்கும்போது இரண்டு வயது குழந்தையையும், ஒருவரையும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் குறித்த ஆப்கானிஸ்தான் நபர் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |