479 ஓட்டங்கள் இலக்கு: டிரா செய்து மிரட்டிய ஆப்கானிஸ்தான்
Afghanistan and bangladesh test ends drawn: வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
வங்காளதேச அணி நிர்ணயித்த 479 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் டிரா செய்தது.
அடல் 111 ஓட்டங்கள்
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அபு தாபியில் நடந்தது.

வங்காளதேச அணி நிர்ணயித்த 479 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி ஆப்கானிஸ்தான் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஒவ்வொரு வீரரும் பொறுப்புடன் ஆடி ஓட்டங்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் அணி நல்ல நிலையில் பயணித்தது. குறிப்பாக தொடக்க வீரர் அடல் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 281 ஓட்டங்களாக உயர்ந்தபோது அடல் 111 ஓட்டங்களில் (3 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், கியாஸ் அகமது (Qais Ahmad) அணியை தூக்கி நிறுத்தினார்.

டிராவில் முடிந்த டெஸ்ட்
கடைசி நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் போட்டி வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. கியாஸ் அகமது ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்காளதேச தரப்பில் எபாடோட் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஹசன் மஹ்முத் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 53 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 102 ஓட்டங்களும் விளாசிய வங்காளதேச வீரர் லித்தன் தாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
