ஆப்கானிஸ்தான் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் உருவானது.
40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக 8 முறை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
Ya Allah Rehem !!
— Fatima Khan (@afficasm) October 8, 2023
Afghanistan Earthquake Death Toll Rises to 2000 many more injured no ais provided yet. Pray For Them ?? #AfghanistanEarthquake pic.twitter.com/ZLJ1gGbn9S
இதனால் அப்பகுதி முழுவதும் நிலைகுலைந்தது, அத்துடன் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு உடனடியாக சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
4000 பேர் பலி
நிலநடுக்கம் ஏற்பட்ட சனிக்கிழமை கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் ஆண்கள்,பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், 20 கிராமங்களில் இருந்த 1983 வீடுகள் தரைமட்டமாக ஆனதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 பேரிடர் மீட்பு குழு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |