சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆன ஜிம்பாப்வே! சம்பவம் செய்த இப்ராஹிமின் படை
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது.
இப்ராஹிம் ஜட்ரான் 92 ஓட்டங்கள்
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் குவித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) 49 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 201 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
இப்போட்டியில் அகமதுசாய் 3 விக்கெட்டுகளும், ஃபரீத் அகமது மாலிக் மற்றும் ஃபரூக்கி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டநாயகன் விருதும், இப்ராஹிம் ஜட்ரான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
ஒரே ஒரு டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற ஜிம்பாப்வே, சொந்த மண்ணில் டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |