இலங்கை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி: 38 ஓவரிலேயே நிர்மூலமான பரிதாபம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பல்லேகெல்லேவில் இன்று நடைபெற்றது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சதமடித்து அசத்திய இப்ராஹிம் ஜட்ரான்
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இப்ராஹிம் ஜட்ரான் மற்றும் குர்பாஸ் ஜோடி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
Afghanistan put on a formidable total on board ?
— ICC (@ICC) November 25, 2022
Scorecard ?: https://t.co/gYturLqIEm
Watch the #SLvAFG series on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ? pic.twitter.com/x1MZIvwzxz
தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான் அபாரமாக விளையாடி 120 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
மேலும் குர்பாஸ் 53 ஓட்டங்களும், ரஹ்மத் 52 ஓட்டங்களும் எடுத்தனர் இதனால் ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ரஜிதா, லக்ஷன், லஹிரு குமாரா, தீக்ஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தடுமாறிய இலங்கை அணி
இலங்கை அணியின் தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க தவிர மற்ற வீரர்கள் யாரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் வெற்றிக்கான ஓட்டங்களை குவிக்க முடியாமல் இலங்கை அணி ஆரம்பம் முதலே மிகவும் தடுமாறியது.
Afghanistan keep Sri Lanka at bay with regular wickets ?
— ICC (@ICC) November 25, 2022
Scorecard ?: https://t.co/gYturLrgtU
Watch the #SLvAFG series on https://t.co/CPDKNxpgZ3 (in select regions) ? pic.twitter.com/oo3JXtunxb
தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க மட்டும் அணிக்காக 10 பவுண்டரிகள் விளாசி 85 ஓட்டங்கள் குவித்து இருந்தார், அவருடன் வனிந்து ஹசரங்க வெற்றிக்காக 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி 66 ஓட்டங்கள் சேர்த்தார்.
ஆனால் 295 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி 38 வது ஓவரின் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 234 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.
A cracking win! ?
— ICC (@ICC) November 25, 2022
Crucial World Cup Super League points for Afghanistan as they beat Sri Lanka in the first ODI ?
Scorecard ?: https://t.co/gYturLqIEm
Watch the #SLvAFG series on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ? pic.twitter.com/YnPJyED6ur
ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு தரப்பில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 4 விக்கெட்டுகளையும், குல்பாடின் நைப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.
ஆட்டத்தில் சதமடித்து ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு உதவிய இப்ராஹிம் ஜட்ரான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.