ஜிம்பாப்வேவுக்கு மரண அடி: முத்தரப்பு தொடரை கைப்பற்றிய ஆப்கான்..ரஷீத் கான் தொடர் நாயகன்
Afghanistan beat zimbabwe and won tri-series: ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி முத்தரப்பு தொடரை வென்றது.
ஷார்ஜாவில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
சிக்கந்தர் ரஸா 68 ஓட்டங்கள்
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 43.3 ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) 68 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்தார்.
ரஷீத் கான் (Rashid Khan) 3 விக்கெட்டுகளும், ஃபரூக்கி, பிலால் சமி மற்றும் மொஹம்மது நபி தலா 2 விக்கெட்டுகளும், ஓமர்சாய் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ரஷீத் கான் தொடர் நாயகன்
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 34.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்கள் எடுத்த இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) ஆட்டநாயகன் விருதும், 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷீத் கான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
