இரண்டாக பிளக்கும் ஆப்பிரிக்க கண்டம்; உருவாகப்போகும் புதிய பெருங்கடல்!
ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிளந்துகொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு பகுதிகளாக உடைகொண்டிருப்பதாகவும், நிலத்தால் சூழப்பட்ட 6 ஆப்பிரிக்க நாடுகள் புதிய பெருங்கடலைப் பெறும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமீபத்தில் வெளிவந்த சில வீடியோக்களில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விரிசல் பிளவாக மாறுவது முழுமையாகத் தெரிய பல மில்லியன் ஆண்டுகள் ஆகும். பிளவுக்குப் பிறகு, உலகில் இன்னொரு புதிய பெருங்கடல் பிறக்கும், ஆனால் அடுத்த சில மில்லியன் ஆண்டுகளுக்கு மனிதன் உயிருடன் இருந்தால் மட்டுமே அதைப் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் இதுபோன்ற 6 நாடுகள் உள்ளன, அவை எல்லா பக்கங்களிலிருந்தும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பிளவுக்குப் பிறகு ருவாண்டா, உகாண்டா, காங்கோ, புருண்டி, மலாவி, ஜாம்பியா ஆகிய இந்த 6 நாடுகளும் கடல் கரையைப் பெறும். கென்யா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் தலா இரண்டு பிராந்தியங்களைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில், கென்யாவின் தலைநகரான நைரோபியிலிருந்து சுமார் 142 கிமீ தொலைவில் உள்ள நரோக் என்ற சிறிய நகரத்தில் இதேபோன்ற விரிசல் காணப்பட்டது. கனமழைக்கு பிறகும் இங்கு விரிசல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்போது அது மழையின் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது, ஆனால் புவியியலாளர்கள் நிலத்தின் உள்ளே நகர்வதால், மேலே ஒரு விரிசல் ஏற்பட்டது என்று நம்புகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 7 மி.மீ. ஆப்பிரிக்கக் கண்டத்தின் இரு பகுதிகளாகப் பிரிந்து புதிய கடல் உருவாகும். இதன் காரணமாக, நிலத்தால் சூழப்பட்ட பல நாடுகளில் கடற்கரைகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
IFL Science தகவலின் படி, இந்த நிகழ்வு நடைபெற சுமார் 138 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ஆண்டுக் காலமாக இந்த நிகழ்வு அப்பகுதியில் நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.
2005-ஆம் ஆண்டில் எத்தியோப்பியா பகுதியில், கிழக்கு ஆப்பிரிக்கா டெக்டோனிக் தட்டுகள் பிளவைத் தொடர்ந்து, 56 கி.மீ தொலைவிற்குப் பெரிய பிளவு ஏற்பட்டது. அதன் விளைவு தான் தற்போது ஆப்பிரிக்கா கண்டம் பிரிவதாகக் கூறப்படுகிறது.