குப்பை லொறியில் பல மணிநேரம் சிக்கித் தவித்த சிறுவன்
சூடானில் குப்பை லொறியில் 8 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித்தவித்த 10 வயது சிறுவன் மீட்கப்பட்டான்.
குறித்த சம்பவம் ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகர் கார்ட்டூமில் செவ்வாய்கிழமை அதிகாலை நடந்துள்ளது.
பிபிசி நியூஸ் ஆப்பிரிக்காவின் அறிக்கையின்படி, மஜீத் முபாரக் இப்ராஹிம் (Majed Mubarak Ibrahim) என்று பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட 10 வயது சிறுவன், கார்ட்டூம் ஸ்டேட் கிளீனிங் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் டிரக்கில் வேலை செய்து கொண்டிருந்தான்.
அவன் குப்பைகளை உள்ளே வீசியபோது குப்பையோடு லொறிக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. சூடானில் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவன் உயிருடன் வெளியே எடுக்கப்பட்ட பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
IMAGE SOURCE: OMER BALAL/FACEBOOK
ஆனால், சிறுவனின் உடல்நிலை குறித்து கூடுதல் விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடான் செய்தி இணையதளமான Altagyeer அறிக்கையின்படி, இயந்திரத்தின் உள்ளே இருந்த சிறுவனின் கொடூரமான படங்களை ஆர்வலர்கள் பரப்பினர், இரும்புத் தடுப்புகளுக்குப் பின்னால் இருந்து அவனது சிறிய கை மட்டுமே தெரியும்.
திங்கள் இரவு முதல் செவ்வாய் காலை வரை 8 மணி நேரம் மஜீதின் உள்ளே சிக்கியுள்ளார்.
OMER BALAL/FACEBOOK
குழந்தைகள் சிலர் ராணுவ வீரர்களாக நியமிக்கப்படும் சூடானில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை இந்த விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று சமூக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சூடானில் கடுமையான பொருளாதார உண்மைகள் சில குழந்தைகள் ஆபத்தான வேலைகளில் வேலை செய்ய வழிவகுத்துள்ளது.