பிரித்தானிய காடொன்றில் கைது செய்யப்பட்ட பழங்குடியின மன்னர்
பழங்குடியின மன்னர் என தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவரும், அவரது குழுவினரும் ஸ்கொட்லாந்திலுள்ள காடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பழங்குடியின மன்னர்
இன்று காலை 8.00 மணியளவில், ஸ்கொட்லாந்திலுள்ள Jedburgh என்னுமிடத்தில் அமைந்துள்ள வனப்பகுதி ஒன்றிற்கு புலம்பெயர்தல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுடன் பொலிசார் விரைந்தார்கள்.
அங்கு முகாமிட்டிருந்த Kofi Offeh என்னும் நபரையும் அவரது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் கைது செய்தார்கள்.
Kofi Offeh (36), கானா என்னும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரது மனைவி Jean Gasho (45), ஜிம்பாபே நாட்டைச் சேர்ந்தவர்.
Kofiயின் உதவியாளரான Kaura Taylor (21), அமெரிக்காவிலுள்ள டெக்சாஸைச் சேர்ந்தவர். சட்டத்தரணியாவதற்காக படித்துக்கொண்டிருந்த Kauraவை Kingdom of Kubala என்னும் ஒரு போலி மதக்குழு மூளைச்சலவை செய்து அழைத்துச் சென்றுவிட்டதாக அவரது தாயான Melba Whitehead குற்றம் சாட்டியிருந்தார்.
எப்படியாவது தன் மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் ஸ்கொட்லாந்து அதிகாரிகளைக் கோரியுள்ள அவர் தன் மகளை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், Jedburgh என்னுமிடத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் முகாமிட்டிருந்த Kaura உட்பட அந்தக் குழுவினரை பொலிசார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
Kofi மற்றும் Kaura இருவரையும் பொலிசார் கைது செய்து தனித்தனி வேன்களில் ஏற்றும் காட்சியை Kofiயின் மனைவியான Jean Gashoதனது மொபைல் மூலம் நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.
Kofi தலைமையிலான இந்தக் குழு, தாங்கள் ஸ்கொட்லாந்தில் தங்கியிருக்கும் இடம் தங்கள் மூதாதையர்களிடமிருந்து 400 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது என்றும், தாங்கள் அதை மீட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |