15 ஆண்டுகளுக்கு பிறகும்.. திருச்செந்தூர் கோயில் கலசத்தில் அப்படியே இருக்கும் தானியம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 15 ஆண்டுகள் கழித்தும் கோபுரத்தில் உள்ள கலசத்தில் வைக்கப்பட்டிருந்த வரகு தானியம் அப்படியே இருப்பது ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
கலச தானியம்
பொதுவாகவே ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
அந்தகவகையில், தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2009 -ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அதன்படி, கடந்த 2021 -ம் ஆண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த நேரம் கொரோனா காலகட்டம் என்பதால் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒருபகுதியாக கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களை மாற்றும் பணிகள் நடைபெற்றது.
அப்போது, 137 உயரத்தில் கலசத்தில் இருக்கும் வரகு தானியம் 15 ஆண்டுகள் கழித்தும் நல்ல நிலையில் அப்படியே இருக்கிறது. இதனை பார்த்த பக்தர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
ஏன் அவ்வாறு வைக்கப்படுகிறது?
கோயிலில் உள்ள கலசங்களில் தானியங்கள் வைக்கப்படுவது குறித்து பல கருத்துக்கள் நிலவி வருகிறது. வறட்சி, போர் உள்ளிட்ட காலங்களில் தானியங்களை மீண்டும் விதைக்கவே கலசத்தில் தானியங்கள் வைக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் வெள்ளம் காலத்தில் தானியங்கள் பாதுகாப்பாக இருக்கவே அங்கு வைக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். ஆனால், இந்த கருத்துக்கள் தவறான கருத்துக்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |