35 வருட காதல்! 60 வயது காதலியுடன் ரொமான்டிக்கான திருமணம்
35 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு இறுதியாக 60 வயது பெண்மணியிடம் அவரது காதலர் திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்து இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருமணத்திற்கு மறுத்த காதலன்
பிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரியா மற்றும் கிரஹாம் ஜோடி 1988ம் ஆண்டு முதல், அதாவது கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
தற்போது 56 வயதுடைய காதலர் கிரஹாம், கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அவரது காதலி ஆண்ட்ரியாவிடம் அவருடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்றும், அவருடைய காதலை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் மோதிரம் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.
Beaver County Times
மேலும் திருமணம் செய்து கொண்டு தான் காதலை நிரூபிக்க வேண்டும் என்று இல்லை எனவும், நம்முடைய அர்ப்பணிப்பே வலுவான உறவுக்கு போதுமானது என்றும் காதலர் கிரஹாம் வசனம் பேசியுள்ளார்.
அத்துடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருமணத்திற்கு மறுப்பும் தெரிவித்துக் கொண்டு வந்துள்ளார்.
இறுதியில் மன மாறிய காதலன்
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காதலன் கிரஹாம் திடீரென மனம் மாறி ஸ்காட்லாந்தின் லாசி மவுத் கடற்கரையில் தன்னுடைய 60 வயது காதலி ஆண்ட்ரியாவின் முன் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் மீண்டும் ப்ரொபோஸ் செய்து அசத்தியுள்ளார்.
சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து தற்போது ஓய்வில் இருக்கும் ஆண்ட்ரியா இது குறித்து பேசுகையில், காதலன் கிரஹாமின் இந்த ப்ரொபோஸை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிரஹாம் ப்ரொபோஸ் செய்தது மிகவும் ரொமான்டிக்காக இருந்தது என்றும் ஆண்ட்ரியா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 60 வயது நிரம்பிய ஆண்ட்ரியாவும், 56 வயது நிரம்பிய கிரஹாமும் செப்டம்பர் 9ம் திகதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.