கொரோனா தடுப்பூசிகள் முதல் டோஸ் போட்டு 5 வாரங்களுக்குப் பிறகு கண்டிப்பாக இது நடக்கும்! ஆய்வில் தெரியவந்த உண்மை
கொரோனா தடுப்பூசிகள் முதல் டோஸ் போட்டு ஐந்து வாரங்களுக்குப் பிறகு 80% தொற்றுநோயைக் குறைக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) மற்றும் சுகாதார அமைச்சகம் நடத்தியுள்ளது.
இத்தாலி முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட 13.7 மில்லியன் மக்களை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Pfizer, மாடர்னா அல்லது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் போஸை போட்டு ஐந்து வாரங்களுக்குப் பிறகு அனைத்து வயதினரிடையே கொரோனா நோய்த்தொற்றுகள் 80% குறைந்துவிட்டன என ஆய்வு முடிவு காட்டுகிறது.
முதல் டோஸை பெற்ற இரண்டு வாரங்களுக்குள் நோய்த்தொற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பு ஆகியவற்றின் ஆபத்து படிப்படியாகக் குறைந்துள்ளது என்பதையும் ஆய்வு முடிவு காட்டுகிறது.
முதல் டோஸ் போட்ட 35 நாட்களுக்குப் பிறகு, தொற்றுநோய்களில் 80%, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள் 90% மற்றும் இறப்புகளில் 95% குறைந்துள்ளது என்று தேசிய சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.