ஜப்பான், பிரித்தானியாவைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பணக்கார நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலை
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான ஜேர்மனி தற்போது பொருளாதார மந்தநிலையில் சிக்கியுள்ளது.
கடந்த வாரம் பிரித்தானியா மற்றும் ஜப்பானில் மந்தநிலை ஏற்பட்டது. இப்போது மற்றொரு ஐரோப்பிய நாடான ஜேர்மனியும் அதே பாதையில் செல்வதாகத் தெரிகிறது.
2023-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 0.3 சதவிகிதம் சரிந்து.
இப்போது 2024-ஆம் ஆண்டில், ஜனவரி மற்றும் மார்ச் இடையேயான முதல் காலாண்டில் ஜேர்மனியின் GDP மீண்டும் சுருங்கலாம் என்று நாட்டின் மத்திய வங்கியான Bundesbank அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு பொருளாதார நடவடிக்கைகள் மந்தமானால் ஜேர்மனி தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்கு தள்ளப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த வாரம்தான் ஜேர்மனி ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 3வது பாரிய பொருளாதாரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
2022-இல், ரஷ்யா உக்ரைன் மீது போரை அறிவித்த பிறகு ஜேர்மனியில் பணவீக்கம் அதிகரித்தது. மேலும், தொழில் துறையில் உற்பத்தி குறைந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து தேவை குறைவு, நுகர்வோர் செலவினம் குறைவு மற்றும் உள்நாட்டு முதலீடு குறைவு போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மத்திய வங்கி, ரயில் மற்றும் விமான சேவைகள் உட்பட பல்வேறு ஊழியர்களின் வேலைநிறுத்தம் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
germany recession 2024, germany recession news, europe countries recession, Richest country in EUrope