நேபாளத்தை தொடர்ந்து இரு வேறு நாடுகளில் ஊழலுக்கு எதிராக வெடித்த போராட்டம்
சமீபத்தில், நேபாளத்தில் GenZ என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் விளைவாக நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸில் போரட்டம்
இதனைத்தொடர்ந்து சமீபத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் வெள்ள தடுப்பு கட்டமைப்பில் நடந்துள்ளா ஊழலுக்கு எதிராக செப்டம்பர் 21 ஆம் திகதி பெரிய போரட்டம் வெடித்தது.
தலைநகர் மணிலாவில் நடந்த பேரணியில், சுமார் 33,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அமைதியாக தொடங்கிய இந்த பேரணி, ஜனாதிபதி மாளிகை அருகே சென்ற போது, காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டது. காவல்துறை வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
Thousands rally in Philippines against corruption, with nearly 13,000 gathering in Manila alone
— RT (@RT_com) September 21, 2025
The protesters are angered by a ballooning scandal involving bogus flood-control projects that cost taxpayers billions of dollars pic.twitter.com/lfxu49Kb8c
இதனைத்தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தினர்.
இந்த வன்முறையில், 93 காவல்துறையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறை தொடர்பாக 216 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 88 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெருவில் போராட்டம்
இதே போல், தென் அமெரிக்க நாடான பெருவிலும், அரசு அலுவலகங்களில் ஊழல், சமீபத்தில் முன்மொழியப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக GenZ என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் வீதியில் இறங்கியுள்ளனர்.
பெரு தலைநகர் லிமாவில் 500க்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்று கூடினர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை நெருங்கி சென்ற போது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் தடியால் தாக்க தொடங்கினர்.
Lima, Perú: Un gran número de jóvenes A ESTA HORA protestan contra el gobierno de Dina Boluarte, mientras la policía comienza a reprimir a las personas que intentan llegar al Congreso de la República.
— PIENSAPRENSA 357 mil Seguidores (@PiensaPrensa) September 21, 2025
video @mirecarhuas pic.twitter.com/LgTbja56uz
கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்த தொடங்கினர்.
இதில், 12 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். 6 பத்திரிக்கையாளர்களால் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |