முடி கொட்டியதை தொடர்ந்து நகங்கள் உதிர்வதால் பீதியில் ஆழ்ந்துள்ள கிராம மக்கள்
சில மாதங்களுக்கு முன்னர், மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு திடீரென முடி உதிர்ந்ததால், வழுக்கை ஏற்பட்டது.
முடி கொட்டுதல்
இதற்கான காரணம் தெரியாமல் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இந்த பாதிப்பால், பல மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல மறுத்தனர். பல நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்று போனது.
இதனையடுத்து, மாவட்ட சுகாதார அதிகாரிகள், அந்த பகுதி மக்களின் முடி மற்றும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அந்த பகுதி மக்கள் உட்கொள்ளும் கோதுமையில், வழக்கத்தை விட 1000 மடங்கு அதிகளவில் செலினியம் இருப்பது தெரிய வந்தது.
கொத்துக்கொத்தாக முடி கொட்டியதோடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, உச்சந்தலையில் அரிப்பு, கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது.
இதனையடுத்து, சில வாரங்களில் முடி கொட்டுதல் நின்று, மீண்டும் முடி வளர தொடங்கியது. தற்போது அந்த பகுதி மக்களுக்கு, கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் உடைந்து, உதிர தொடங்கியுள்ளது.
நகம் உதிர்தல்
இது குறித்து பேசிய கிராமத் தலைவர் ராம் தர்கர், "நகம் உதிர்தல் பிரச்சினை சமீபத்திய நாட்களில் மட்டுமே தோன்றியுள்ளது. முதல் 2 நாட்களில், நகங்கள் வெடிக்கத் தொடங்குகின்றன, பின்னர் அவை உதிர்ந்து விடுகின்றன" என தெரிவித்துள்ளார்.
Maharashtra News: Residents of Buldhana's Shegaon Taluka are facing unexplained nail shedding. Earlier, rampant hair loss was observed in Buldhana's Bondgaon residents. Water contamination is suspected to be the reason.
— Manasi K (@manasisaysmeow) April 17, 2025
#Maharashtra #waterpollution #Buldhana #news@fpjindia pic.twitter.com/SMOiTxUto0
"இதுவரை 30க்கும் மேற்பட்டோர் நகம் உதிர்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவர்களுக்கு முதன்மை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் அனில் பங்கர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை பரிசோதனைகள் மற்றும் மாதிரி சேகரிப்பைத் தவிர, எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முடி உதிர்தல் பாதிப்பை எதிர்கொண்ட மக்களுக்கு, தற்போது நகங்களும் உதிர தொடங்கியுள்ளதால் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |