புடினை எச்சரித்த ட்ரம்ப்: பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா அறிவிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால் ரஷ்யா மீது பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யா அடிபணிந்துள்ளதுபோல் தெரிகிறது.
ரஷ்யாவை எச்சரித்த ட்ரம்ப்
என்னால் பொருளாதார ரீதியில் பல விடயங்களைச் செய்யமுடியும், அவை ரஷ்யாவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், அதை நான் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால், நான் அமைதியை விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா அறிவிப்பு
ட்ரம்பின் எச்சரிப்புக்கு ரஷ்யா பணிந்துள்ளதுபோல் தெரிகிறது. காரணம், நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது.
விரைவில், சொல்லப்போனால், இன்றே அமைதி தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் விவாதிக்கத் தயார் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |