உக்ரைனுக்கு பிறகு எங்கள் திட்டம் இதுதான்: பகீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

ambassador vladimirputin russiawar ukraineinvasion chillingwarning
By Arbin Mar 22, 2022 10:30 AM GMT
Report

நேட்டோ அமைப்பில் சேருவதைக் கருத்தில் கொண்டு செயல்படும் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுக்கும், ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளுக்கும் ரஷ்ய தூதுவர் ஒருவர் கடும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் இணையும் உக்ரைனின் திட்டத்தை தகர்க்கவே ரஷ்யா உக்ரைன் மீது தற்போது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கான ரஷ்ய தூதர் Igor Kalabukhov உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவிக்கையில்,

நேட்டோ அமைப்பு தொடர்பில் ரஷ்யாவுக்கு சில திட்டங்கள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், போஸ்னியா நேட்டோவில் உறுப்பு நாடாக இணைந்துவிட்டது என வைத்துக் கொள்வோம், ரஷ்யாவை இலக்காகக் கொண்ட அணு ஏவுகணைகளை அங்கு வைக்க பிரஸ்ஸல்ஸ் முடிவு செய்தது என்றால், ரஷ்யா கண்டிப்பாக நடவடிக்கை முன்னெடுக்கும் என்றார்.

உக்ரைனுக்கு பிறகு எங்கள் திட்டம் இதுதான்: பகீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | After Ukraine Invasion Russia Chilling Warning

மட்டுமின்றி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாடுகள் எந்த ஒரு அமைப்பில் இணைவதாக முடிவெடுத்தாலும், அது அவர்களின் உள்நாட்டு விவகாரம். ஆனால் எங்கள் எதிர்வினை அது வேறு விவகாரம் எனவும் Igor Kalabukhov குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ அதையே அவர்களுக்கு உணர்த்தினோம். ரஷ்யாவுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால், கண்டிப்பாக எதிர்வினை இருக்கும் என்றார் அவர்.

உக்ரைனுக்கு பிறகு எங்கள் திட்டம் இதுதான்: பகீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | After Ukraine Invasion Russia Chilling Warning

மேலும், உக்ரைன் மட்டுமின்றி, தற்போது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குரோஷியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கும் ரஷ்யாவின் எதிர்வினை காத்திருக்கிறது என்றார் Igor Kalabukhov.

உக்ரைன் ஊடுருவலை அடுத்து, ரஷ்யாவின் திட்டம் இதுதான் என Igor Kalabukhov சூசகமாக தெரிவித்துள்ளார் என்றே செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், இது ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப மறுத்து வருகிறது.

உக்ரைனுக்கு பிறகு எங்கள் திட்டம் இதுதான்: பகீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | After Ukraine Invasion Russia Chilling Warning

உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் களமிறங்கினால், விளாடிமிர் புடின் கண்டிப்பாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவார் என்ற அச்சமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, உக்ரைன் மீது விமானங்கள் பறக்க தடை மண்டலத்தை விதிக்குமாறு நேட்டோவிடம் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டது உறுப்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1949ல் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் 12 நிறுவன உறுப்பினர்கள் பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா.

உக்ரைனுக்கு பிறகு எங்கள் திட்டம் இதுதான்: பகீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | After Ukraine Invasion Russia Chilling Warning

இதற்கு பதிலடியாக 1955ல் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளின் சொந்தக் குழுவை ரஷ்யா உருவாக்கியது, இது வார்சா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹங்கேரி மற்றும் போலந்து போன்ற பல முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US