பிணைக் கைதியின் நாக்கை 2 துண்டாக வெட்டிய ரஷ்யர்கள்: உக்ரைனிய வீரர் குமுறல்
பிணைக் கைதி ஒருவரும் நாக்கு இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதாக ரஷ்யாவிடம் பிணைக் கைதியாக இருந்த உக்ரைனிய ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகளுக்கு நேரும் கொடுமை
ரஷ்யாவின் பிடியில் இருந்து 679 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட உக்ரைனிய ஆயுதப்படை வீரர் Vladislav Zadorin, பிணைக் கைதி ஒருவரின் நாக்கு இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டது குறித்தும் ரஷ்யர்களின் கொடூரமான சித்திரவதைகள் குறித்தும் பேசியுள்ளார்.
உக்ரைனிய ஆயுதப்படை வீரரான Vladislav Zadorin பாம்பு தீவில்(Snake Island) நடந்த சண்டையின் போது பிணைக் கைதியாக பிடித்து செல்லப்பட்டார்.
"One prisoner's tongue was cut into two pieces": Vladislav Zadorin, an AFU soldier who was captured during the battle for Snake Island and spent 679 days there, told about the brutal torture by the Russians
— NEXTA (@nexta_tv) September 3, 2024
"They used stun guns everywhere - they electrocuted the tongue, the… pic.twitter.com/ubRXl8fAwU
வாக்குமூலம்
அதில், “ரஷ்யர்கள் அனைத்து இடத்திலும் ஸ்டன் துப்பாக்கிகள் (stun guns) வைத்து இருப்பதாகவும், அவற்றை கொண்டு பிணைக் கைதிகளின் நாக்கு மற்றும் பிறப்புறுப்புகள் மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதைகள் செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இடுக்கிகளை(pliers) கொண்டு பிணைக் கைதிகளின் பற்களை பிடுங்குவது, ஆசன வாயில் பொருட்களை திணிப்பது ஆகிய கொடுமைகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிணைக் கைதி ஒருவரின் நாக்கை இரண்டு துண்டுகளாக வெட்டி ரஷ்யர்கள் எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |