பிரான்சில் மீண்டும் ஒரு புதிய அரசு: அதையும் கவிழ்க்க தயாராகும் எதிர்க்கட்சிகள்
பிரான்சில் மீண்டும் ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. புரியும்படி கூறினால், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனலாம்.
பிரான்சில் மீண்டும் ஒரு புதிய அரசு
பிரான்சில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளார்.
மேக்ரானுக்கு நெருக்கமானவரான ரோலண்ட் (Roland Lescure) என்பவரை நிதி அமைச்சராக நியமித்துள்ளார் பிரதமர் செபாஸ்டியன் (Sebastien Lecornu).
அத்துடன், முன்னாள் நிதி அமைச்சரான புரூனோ (Bruno Le Maire) பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றபடி, Bruno Retailleau உள்துறை அமைச்சராக நீடிக்கிறார், Jean-Noel Barrot வெளியுறவு அமைச்சராகவும், Gerald Darmanin நீதித்துறை அமைச்சராகவும் தொடர்கிறார்கள்.
கவிழ்க்க தயாராகும் எதிர்க்கட்சிகள்
விடயம் என்னவென்றால், நேற்று அறிவிக்கப்பட்ட புதிய அரசையும் கவிழ்க்கத் தயாராகிவருகின்றன எதிர்க்கட்சிகள்.
நாளை, தனது கொள்கைகள், பட்ஜெட் முதலான விடயங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார் பிரதமர் செபாஸ்டியன்.
ஆனால், புதிய அரசு அதிக நாட்கள் நீடிக்காது என்றே ஊடகங்கள் செய்தி வெளியிடத் துவங்கிவிட்டன.
அதற்குக் காரணம் என்னவென்றால், இந்த அரசும் முந்தைய அரசின் தொடர்ச்சிதான், ஆக, பழைய கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம், அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று கூறிவருகின்றன எதிர்க்கட்சிகள்.
ஆக, புதிய அரசு நீடிக்குமா? எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |