2021 சட்டமன்றத் தேர்தலில் யாரை எதிர்த்து... எந்த தொகுதியில் போட்டி? சீமான் அதிகாரப்பூர்வ தகவல்
2021 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2020 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்.
ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
இனி திமுக-அதிமுக இடையே போட்டியில்லை, திமுக-வுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான். திராவிடமா, தமிழரா என்ற போட்டியை முன்நிறுத்தி இந்த தேர்தலை சந்திப்போம் என சீமான் தெரிவித்தார்.