28 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதி! பலரின் மோசமான பேச்சுக்களுக்கு தந்த தரமான பதிலடி
தன்னை விட 28 வயது அதிகமான நபரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் பலரின் மோசமான பேச்சுக்களுக்கு தம்பதி ஆளாகியுள்ளனர்.
அமெரிக்க யூ டியூபர்களான சாரா ஹெண்டர்சன் (27) மற்றும் டேரன் (55) ஆகியோர் தாங்கள் சந்தித்து கொண்ட 90 நாட்களில் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
பின்னர் குடும்பத்தினர் பேச்சை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர், தற்போது அவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது.
ஆனால் அதிக வயது வித்தியாசம் காரணமாக இருவரும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதன்படி டேரன், வக்கிரபுத்தி கொண்டவர் எனவும், சாரா ஒரு gold-digger (அதிக பணம் கொண்டவரை அந்த பணத்துக்காக மயக்கி அவரை திருமணம் செய்து கொண்டவர்) என்றும் பலரும் விமர்சித்துள்ளனர்.
இது குறித்து சாரா கூறுகையில், டேரனை நான் பணத்துக்காக மணக்கவில்லை, அவர் நகைச்சுவை உணர்வு, அன்பு செலுத்தும் குணம் தான் என்னை ஈர்த்தது என கூறுகிறார்.
டேரன் கூறுகையில், எனக்கு சாரா தான் எல்லாமே, ஆனால் என்னை இந்த சமூகம் மோசமாக பேசுகிறது, எங்கள் காதல் உண்மையானது என கூறியுள்ளார்.