அவர் என் தந்தை கிடையாது... வருங்கால கணவர்! ஆச்சரியம் கொடுக்கும் அழகிய இளம்பெண்
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் தன்னை விட 21 வயது அதிகமானவரை திருமணம் செய்யவுள்ள நிலையில் அது குறித்து மனம் திறந்துள்ளார்.
வயது வித்தியாசம்
கேரல் கே டெரி (28) என்ற இளம்பெண்ணும் மிட்ச் கேர்னே (49) என்பவரும் தீவிரமாக காதலிக்கும் நிலையில் விரைவில் மண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.
இவ்வளவு வயது வித்தியாசத்தில் டெரி ஒருவரை காதலிப்பது இது முறை இல்லையாம். ஆம்! ஏற்கனவே 55 வயதான நபரை காதலித்து அவரை பிரிந்திருக்கிறார். டெரி கூறுகையில், பலரும் என்னையும், கேர்னேவையும் தந்தை, மகளா என கேட்கிறார்கள்.
MITCH CARNEY
கவலைப்படவில்லை
ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. காதலனையும், காதலியையும் தேர்வு செய்வது அவர்களின் உரிமை.
வயது அதிகமானவர்களுடன் நான் பழகுவதை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்கள் மற்றும் மற்றவர்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிவார்கள் என கூறியுள்ளார்.