AI-மூலம் இந்திய சாமியார்களை போல் ஜொலிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்
AI தொழில் நுட்பத்தின் மூலம் இந்திய சாமியார்களை போல், ஹாலிவுட் பிரபலங்களை மாற்றியிருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
AI- தொழில் நுட்பத்தின் மாயாஜாலம்
செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI தொழில் நுட்பத்தின் மூலம், பல வித்தைகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் உலக பணக்காரர்கள் ஏழைகளாக இருந்தால், எப்படி இருப்பார்கள் என செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
@educba.com
தற்போது உலகத்தில் பல விதமான வேலைகளை AI தொழில் நுட்பம் முடக்க உள்ளதாக, பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களின் வேலைகளை, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செய்து விடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என போராட்டத்தில் குதித்தனர்.
ஹாலிவுட் பிரபலங்கள்
இந்நிலையில் AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை, ஒருவர் இணையத்தில் வெளியிட்டதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அதில் ஹாலிவுட்டில் பிரபல நடிகர்களான டோம் குரூஸ், லியோனர்டொ டிக்காப்ரியா மற்றும் வில் சுமித் போன்றவர்கள், இந்திய சாமியார்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வரிசையில் கெயானு ரேவெஸ், பிராட் பிட், ராபர்ட் டவுனி, ஜார்ஸ் குலோனி, டோம் ஹாங்ஸ் , மோர்கன் ஃப்ரிமன் போன்றவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் இந்து சாமியார்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.