AI தொழில் நுட்பத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஹாலிவுட் எழுத்தாளர்கள்: காரணம் இது தான்
அமெரிக்காவில் AI தொழில் தொழில்நுட்பத்திற்கு எதிராக, ஹாலிவுட்டில் திரைக்கதை எழுதும் எழுத்தாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
AI தொழில் நுட்பம்
Artificial intelligence என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம், மனித மூளைக்கு நிகராக தீர்மானங்கள் எடுக்கும் வல்லமை வாய்ந்தது. இந்த தொழில் நுட்பத்தை கொண்டு பல துறையில் மனிதனை போலவே சிந்தனை அளவில் செயலாற்ற வைக்க இயலும்.
@istock
மனிதர்களின் புத்திசாலித்தனத்திற்கு மாறாக, இயந்திரங்களால் நிரூபிக்கப்பட்ட தகவலை உணருதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஊகித்தல் ஆகியவை இதில் உள்ள எடுத்துக்காட்டு பணிகளாகும்.
இந்த நிலையில் Plagiarism machines என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் மூலம், ஒரு திரைக்கதைக்கான அல்லது புத்தகத்திற்கான உள்ளீடுகளை சரியாக கொடுத்தால் அது சில மணி நேரங்களில் திரைக்கதையாக மாற்றி விடுகிறது.
திரைக்கதை எழுதும் தொழில் நுட்பம்
அமெரிக்காவில் முதல் முறையாக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். இதன் மூலம் ஒரு திரைக்கதை அமைப்பதற்கான செலவும், நேரமும் குறையுமென தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
@reuters
மேலும் கணிணியால் உருவாக்கப்பட்ட முதல் தர திரைக்கதையை பின்னர் எழுத்தாளர்கள் பிழை திருத்தி, சில மாற்றங்கள் செய்து மீண்டும் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்கலாம் என கூறியிருக்கிறார்கள்.
இந்த தொழில் நுட்பம் எழுத்தாளர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கும் என்றும், அவர்களுக்கு வேலை பறிபோகும் சூழல் உண்டாகும் என்றும் அமெரிக்காவிலுள்ள ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் டிவி சேனல் தொடரில் எழுதும் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தாளர்கள் போராட்டம்
பொதுவாக ஹாலிவுட் எழுத்தாளர்கள் பல காலங்களாக அறிவியல் புனைகதை ஸ்கிரிப்ட்களை எழுதியுள்ளனர். இப்போது, ரோபோக்கள் அந்த வேலையை எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய அவர்கள் போராடுகிறார்கள்.
@reuters
இந்நிலையில் அமெரிக்காவின் ரைட்டர்ஸ் கில்ட் என்ற எழுத்தாளர் சங்கம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரைக்கதைகளை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முயல்கிறது.
@reuters
ஹாலிவுட் ஸ்டுடியோக்கள், ஸ்ட்ரீமிங் சேவைகளை லாபகரமாக மாற்ற போராடி, விளம்பர வருவாய் குறைவதைக் கையாள்வதில், அந்த யோசனையை நிராகரித்து, கில்ட் படி, வருடத்திற்கு ஒரு முறை புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளில் திரைக்கதை எழுத்தாளர் மேற்கொள்ளும் முதல் வேலை நிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.