குப்பையை பிரித்து தராத மக்களை திட்டுவதற்கு AI பயன்படுத்தும் நகரம்
அமெரிக்க நகரமொன்று குப்பை சேகரிப்பில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
AI தொழில்நுட்பம் நாளுக்குநாள் பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஈமெயில் எழுதுவது தொடங்கி, அறுவை சிகிச்சை செய்வது வரை பல்வேறு செயல்களுக்கு AI பயன்படுகிறது.
குப்பை பிரிக்க AI
அதே போல், தற்போது குப்பையை சரியாக பிரித்து தராதவர்களை திட்டுவதற்கு AI பயன்படுத்தப்படுகிறது.
நகரங்களில், நம் வீட்டில் சேரும் குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனியாக பிரித்து கொடுத்தால், நகராட்சியில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் அதை பெற்றுக்கொண்டு, குப்பைகளை முறையாக மறு சுழற்சி செய்து பயன்படுத்துவார்கள்.
அமெரிக்காவின், ஓகியோ மாகாணத்தில் உள்ள சென்டர்வில் நகரில் உள்ள பொதுப்பணித் துறை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 டன் கழிவுகளையும் 1,400 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களையும் சேகரிப்பதாகவும் கூறுகிறது.
இந்நிலையில், அந்த சேவையை மேம்படுத்தும் வகையில், குடியிருப்பாளர்கள் வீசும் குப்பையை ஸ்கேன் செய்யும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனத்தில் மறுசுழற்சி செய்யக்கூடிய பகுதியில், மறு சுழற்சி செய்ய கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் டப்பாக்கள், உலோக கேன்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றை மட்டும் வழங்க வேண்டும்.
வழங்கப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாகவும், காலியாகவும், இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுக் கழிவுகள், வயர்கள் போன்ற "சிக்க வைக்கும் பொருட்கள்" மற்றும் அழுக்கடைந்த காகிதம் போன்ற பொருட்களை மறுசுழற்சி வண்டிகளில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வரும் அஞ்சல் அட்டை
மறு சுழற்சி வாகனத்தில் இடப்படும் பொருட்களை AI ஸ்கேன் செய்யும் போது, அதில் அனுமதிக்கப்படாத பொருட்கள் இடப்பட்டிருந்தால், குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு அஞ்சல் அட்டை அனுப்பப்படுகிறது.
இதில், அடுத்த முறை எந்த பொருட்களை வைக்க வேண்டும் எந்த பொருட்களை வைக்க கூடாது என்பது போன்ற குறிப்புகள் அந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும்.
"இந்த தொழில்நுட்பம், குடியிருப்பாளர்களுக்கு மறு சுழற்சி தொடர்பாக கற்பிப்பதற்காகவும், நகர வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும் எங்களுக்கு உதவுகிறது.
மேலும், மறுசுழற்சி முறையில் மாசுபாட்டைக் குறைப்பது மற்றும் செயலாக்க செலவுகளைக் குறைத்து எங்கள் சேகரிப்பின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துகிறது. இதற்காக 74,945 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என நகர மேலாளர் வெய்ன் டேவிஸ் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |