மெட்டாவின் பல மில்லியன் டொலர் சம்பளத்தை மறுத்த AI மேதை... நேரில் சந்தித்த ஜுக்கர்பெர்க்
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் 24 வயது AI மேதை ஒருவருக்கு 125 மில்லியன் டொலர் சம்பளம் வழங்க முன்வந்தார், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.
முனைவர் பட்ட மாணவர்
இளம் வயதிலேயே AI தொழில்நுட்பத்தில் அவர் மேதை என்பதால், மார்க் ஜுக்கர்பெர்க்கால் அவரை இழக்கவும் முடியாமல் போனது. துரித முடிவெடுத்த ஜுக்கர்பெர்க் நேரிடையாக சந்தித்து ஒப்புக்கொள்ள வைத்ததுடன், சம்பளத்தையும் 250 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளார்.
அந்த இளைஞர், AI ஆராய்ச்சி நிபுணரான Matt Deitke. கடந்த ஆண்டு முதல் தடவையாக மெட்டா நிறுவனம் அவரை அணுகியுள்ளது. 125 மில்லியன் டொலர் சம்பளம் அளிக்கவும் முன்வந்தது. ஆனால், Matt Deitke அந்த சம்பளத்தை நிராகரித்துள்ளார்.
அதன் பின்னரே மார்க் ஜுக்கர்பெர்க் அவரை நேரில் சந்தித்து ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். இருவரும் முன்னெடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மெட்டாவில் இணைந்த முதல் ஆண்டிலேயே Matt Deitke சுமார் 100 மில்லியன் டொலர் வரையில் சம்பாதிக்க உள்ளார்.
24 வயதான Matt Deitke, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முனைவர் பட்ட மாணவர் ஆவார். ஆனால் AI ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக தனது கணினி அறிவியல் படிப்பை கைவிட்டார்.
இதனையடுத்து Matt Deitke சியாட்டிலில் உள்ள ஆலன் இன்ஸ்டிடியூட் ஃபார் AI இல் சேர்ந்தார், அங்கு அவர் "மோல்மோ" என்ற உரை, படங்கள் மற்றும் ஒலிகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட ஒரு சாட்போட்டை உருவாக்கத் தலைமை தாங்கினார்.
சிறந்த AI திறமையாளர்களை
அவர் 'Vercept' என்ற நிறுவனத்தையும் இணைந்து நிறுவினார். மட்டுமின்றி, நிதி திரட்டும் தொடக்க கட்டத்திலேயே 16.5 மில்லியன் டொலர் தொகையை ஈர்த்துள்ளார். அத்துடன் முன்னாள் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி Eric Schmidt என்பவரின் ஆதரவையும் பெற்றார்.
இந்த நிலையில், OpenAI, கூகிள் போன்ற நிறுவனங்கள் ஆட்டம் காணும் வகையில் மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது silicon valley முழுவதும் உள்ள சிறந்த AI திறமையாளர்களை பணியமர்த்த தீவிரம் காட்டி வருகிறார்.
பல ஆயிரம் கோடிகளை சம்பளமாகவும் அளிக்க முன்வருகிறார். வெளியான தகவலின் அடிப்படையில் மெட்டா நிறுவனம் ஆப்பிளின் ரூமிங் பாங்கை 200 மில்லியன் டொலர் சம்பளத்துடன் பணியமர்த்தியுள்ளது.
100 மில்லியன் டொலர் சம்பளத்துடன் OpenAI இன் டிராபிட் பன்சால் மெட்டாவில் இணைந்துள்ளார். புதிதாக இணையும் பலருக்கும் ரூ 1600 கோடி வரையில் சம்பளம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |