AI வளர்ச்சி வேகத்தை குறைக்க ஆந்த்ரோபிக் CEO வலியுறுத்தல்: எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு
AI Growth Should Measured Anthropic's CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) வலியுறுத்தியுள்ளார்..
AI வேகத்தை குறைக்க வேண்டும்
செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாக பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி எச்சரித்துள்ளார்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் எதிர்கால அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் 3 கட்ட விரிவான திட்டத்தை டாரியோ அமோடி முன்வைத்துள்ளார்.
அதன்படி, வெளிப்புற குழுக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிப்பதுடன் நிகழ்வுகளை பதிவு செய்து நுண்ணறிவு மாடல்களை சோதிப்பார்கள்.
ஏஐ நிறுவனங்கள் இணைந்து தெளிவான அளவுகோலையும், வளர்ச்சியின் வேகத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.
ஜனநாயக நாடுகள் ஏஐ பாதுகாப்பு தர நிலைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேணும் என்று வலியுறுத்தியுள்ளார்.
We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.
— Dario Amodei (@DarioAmodei) September 12, 2026
Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…
ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த இந்த திட்ட வழிமுறைகளுக்கு, ஓபன்ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |