இந்தியாவில் வேலைவாய்ப்புகளை விழுங்குமா செயற்கை நுண்ணறிவு? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வேலை வாய்ப்புகளை பறிக்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
AI-யால் பறிபோகுமா வேலைகள்?
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தால், 40-50% அலுவலக வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக மும்பையைச் சேர்ந்த ஆட்டோம்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் அரிந்தம் பால் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் லிங்க்டின் தளத்தில் நடந்த விவாதத்தில் பல்வேறு முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பு
இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிக செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் அலுவலக வேலைகளில் 40-50% வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்திய உற்பத்தித் துறையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், AI தொழில்நுட்பத்தின் வருகை இந்த நிலையை மேலும் மோசமாகலாம் என கூறப்படுகிறது.
நிறுவனங்களின் லாபம் vs. மக்களின் வாழ்வாதாரம்
நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி திறனையும் லாபத்தையும் அதிகரிக்க முற்படும் அதே வேளையில், வேலையிழப்பால் மக்களின் வாங்கும் திறன் குறையும் என்பதை உணர வேண்டும்.
மக்களின் வாங்கும் திறன் குறைந்தால், நிறுவனங்களின் விற்பனையும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிந்தம் பாலின் இந்த எச்சரிக்கை, இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் எதிர்கால விளைவுகள் குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |