"விவசாயத்திலும் நுழைந்த AI Technology" மஞ்சள் வருமானம் பெறுக விவசாயத்திற்கு செய்த உதவி என்ன?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது பல துறைகளில் உதவி செய்து வரும் நிலையில் விவசாயத்திற்கும் உதவி செய்துள்ளது.
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.
முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயத்திற்கும் AI Technology உதவி செய்துள்ளது.
AI இயந்திரம்
இந்திய மாநிலமான தெலங்கானாவில் உள்ள விவசாயிகள் மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin ) அளவு 3 % அதிகமாக இருந்தால் மட்டுமே அதிக விலைக்கு விற்கப்படும்.
இந்நிலையில், நிஜாமாபாத் மார்க்கெட்டில் குர்குமினை அளவிடும் AI இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது. விவசாயிகளும் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு மஞ்சளின் விலை ரூ.6000 -ஆக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ரூ.11,202 -ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மஞ்சளின் தேவையை அதிகரிக்க Spices Board of India ஏ.ஐ அடிப்படையிலான இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. இதனால், மஞ்சளை மதிப்பீடு செய்ய 3 நாள்கள் வரை காத்திருந்த விவசாயிகள், தற்போது 60 விநாடிகளில் வேலையை முடிக்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |