60 யானைகளின் உயிரை காப்பாற்றிய AI Technology! எவ்வாறு நடந்தது?
அசாம் மாநிலத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற யானை கூட்டங்களின் உயிரானது ஏ.ஐ தொழில்நுட்பம் (AI Technology) மூலம் காப்பாற்றப்பட்டது.
AI Technology உதவி
இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் கடந்த 16 -ம் திகதி அன்று கவுஹாத்தியில் இருந்து லும்டிங் நகருக்கு கம்ரூப் விரைவு ரயில் சென்றது.
அப்போது, ஹவாய்புர் மற்றும் லம்சக்ஹங் ரயில்நிலையம் அருகே சுமார் 60 யானைகள் கூட்டமாக தண்டவாளத்தில் கடந்த சென்றன. இந்த சம்பவத்தை ஏ.ஐ தொழில்நுட்பம் (AI Technology) முன்கூட்டியே கணித்தது.
அதாவது, ஏ.ஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் IDS எனப்படும் குறுக்கீட்டை கண்காணிக்கும் திட்டம் மூலம் ரயில் ஓட்டுநர்களுக்கு யானை செல்லும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ரயில் ஓட்டுநர்கள் துரிதமாக ரயிலை நிறுத்தினர். இதனால், சுமார் 60 யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இந்த தொழில்நுட்பமானது தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் அடுத்த மதுக்கரையிலும் பொருத்தப்பட்டு இருப்பதாக வனத்துறையின் முன்னாள் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |