AI தொழில்நுட்பத்தால் பறிபோகும் வேலை: 2 வருடங்களில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் எதிர்காலம்!
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் இரண்டு வருடங்களில் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம்
AI என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் அபாரமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இப்போதே புரோகிராம் எழுதுவது டிசைனிங் செய்வது போன்ற பல துறைகளில் AI தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது.
இதனால் அதிக நேரம் மிச்சமாவதோடு, புதிய தொழில் வழிகளும் உருவாகுவதால், பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு திறனை நோக்கி செல்ல தொடங்கியுள்ளன.
Reuters
இதனால் நன்மைகள் பல உருவாகி வருகிறது என்றாலும், பல்வேறு இடங்களில் ஊழியர்களின் பணி நீக்கங்களும் ஏற்பட தொடங்கி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கூட நிறுவனம் ஒன்றும் தங்களுடைய 90 சதவிகித கஸ்டமர் கேர் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதற்கு பதில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பலரின் வேலை பறிபோகும் அபாயம்
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சிறப்பான முறையில் கோடிங் எழுதும் திறன் கொண்டு இருப்பதால், இன்னும் சில வருடங்களில் அவுட் சோர்சிங் செய்யப்பட்ட கோடிங் வேலைகள் நீக்கப்படும், தெளிவாக கூறவேண்டும் என்றால் கோடிங் செய்வதற்கு ஆட்கள் தேவை என்ற வேலை வாய்ப்பே இல்லாமல் ஆகி விடும் என்று செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட 3 லெவல் புரோகிராமர்கள் வரை வாய்ப்புகள் இல்லாமல் இந்தியாவில் காணாமல் போகலாம் என்று ஸ்டபிளிடி ஏஐ நிறுவனத்தின் சிஇஓ இமாத் மொஸ்டாக் தெரிவித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 50 லட்சம் கோடர்கள் உள்ளனர், அவர்களில் லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலைகள் இந்த செயற்கை நுண்ணறிவு பறித்துக் கொள்ளும் அபாயம் கண்கூடாக தெரிவதுடன் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் AI-யில் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு எதிர்காலத்தில் டெக் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |