உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அமித் ஷா
வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தே.ஜ.கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கூட்டணி உறுதி
கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமித் ஷா சென்னைக்கு வருகை தந்திருந்தார்.
சற்று முன்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹொட்டலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித் ஷா சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினர். இதனால் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகும் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து வரும் அமித் ஷா பேசுகையில், "வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தே.ஜ.கூட்டணி தேர்தலை சந்திக்கும். எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி அமையும்.
அதிமுக பாஜக கூட்டணி என்பது இயல்பானது, அதே நேரத்தில் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. யாருக்கு எத்தனை தொகுதி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக சனாதனம், மும்மொழி விவகாரங்களை திமுக எழுப்புகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை பேசப்படும். மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருமே ஊழல்வாதிகள் ஆவார்.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுச்செயல் திட்டத்தின் கீழ் செயல்படுவோம். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |