அதிமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் - கள்ளச்சாராய வழக்கை CBI விசாரிக்க பிரேமலதா வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கை CBI விசாரிக்க வேண்டும் என அதிமுகவினரின் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் பேராட்டம் நடைபெற்று வருகிறது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
காலை ஆரம்பமாகிய போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பொலிஸார் விதித்துள்ளனர்.
இந்நிலையில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேமலதா உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கை CBI விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரேமலதா வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியில் நடந்தது சாதாரண விஷயமா? இது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா?
இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது.
நாளை கவர்னரை சந்தித்து தே.மு.தி.க. சார்பில் மனு அளிக்க உள்ளோம்.
கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும்.
அ.தி.மு.க.வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |