ரத்த தானம் கொடுப்பது போல நடித்த அதிமுக செயலாளர்.., அவர் கொடுத்த விளக்கம்
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் ரத்த தானம் கொடுப்பது போல நடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரத்த தானம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா என்பவர் ரத்த தானம் செய்வது போல கையை காண்பிக்கும் வீடியோ வைரலாகிறது.
அதாவது அவர் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் வீடியோவுக்கு மட்டும் போஸ் கொடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளிக்கையில், "ரத்த தானம் செய்வதற்காக ஏற்பாடு செய்தார்கள். ஆனால் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. எவ்வளவு என்று கேட்டார்கள், 210 என்று சொன்னதும் ரத்த தானம் செய்ய கூடாது என்றார்கள். வேறு ஒன்றும் இல்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |