114 முறை இளம்பெண்ணை கத்தியால் குத்திய மாணவன்... அமெரிக்காவில் நடந்த பயங்கர சம்பவத்தில் முக்கிய முடிவு
ப்ளோரிடாவில் அழகிய இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், அவரை யாராவது பார்த்தீர்களா என கேட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த பெண்ணின் சக மாணவர்.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Tristyn Bailey (13) என்ற மாணவி, ஒரு சியர் லீடராக இருந்தார். இம்மாதம் (மே) 9ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.12 மணிக்கு பிறகு அவரைக் காணவில்லை. ஆகவே, திங்கள் அன்று காலை 10 மணியளவில், Baileyயைக் காணவில்லை என அறிவிப்பு வெளியிட்டு பொலிசாரும் உள்ளூர் மக்களும் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், Baileyயுடன் படிக்கும் Aiden Fucci (14) என்ற மாணவர், பொலிஸ் காருக்குள்ளிருந்து ஒரு செல்பி எடுத்து, அதின் கீழ், நண்பர்களே யாராவது Baileyயைப் பார்த்தீர்களா என கேட்டிருந்தார்.
அந்த செல்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, சந்தேகத்தின் அடிப்படையில் Aidenஐ விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிசார், அவரை கைது செய்யவோ, அவருக்கு விலங்கிடவோ அல்லது அவரது மொபைலை அவரிடமிருந்து வாங்கவோ இல்லை. சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த செல்பி, Bailey இறந்ததற்குப் பின், ஆனால் அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் வெளியிடப்பட்டதாக பொலிசார் கருதுகிறார்கள்.
ஆகவே, ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு, அதற்காக கொஞ்சம் கூட வருத்தப்படாமல் செல்பி எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டதுடன், தான் அப்பாவி என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்க முயன்றுள்ளார் அவர்.
இதற்கிடையில், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், Aiden வீட்டுக்கு அருகிலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், Baileyயின் உடல் கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட Aidenஉடைய உடலில் Baileyயின் DNAவும், கொலை செய்யப்பட்ட Baileyயின் உடலிலும் உடையிலும் Aidenஉடைய DNAவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், Baileyயும் Aidenம் சேர்ந்து சம்பவம் நடந்த இடத்துக்கு செல்லும் காட்சியும், பின்னர் Aiden மட்டும் சம்பவ இடத்திலிருந்து திரும்பும் CCTV கமெரா காட்சிகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், Aidenக்கு 14 வயதே ஆகிறது என்பதால், இந்த வழக்கை சிறார் வழக்காக தொடர்வதா, அல்லது அவரை வயது வந்தவராக கருதி வழக்கைத் தொடர்வதா என அதிகாரிகள் கடந்த சில வாராங்களாக விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், Baileyயின் உடற்கூறு ஆய்வு வெளியானது. அதில் Bailey 228 முறை கத்தியால் குத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. Aiden ஒவ்வொரு முறை தன்னைக் கத்தியால் குத்தும்போது Bailey தடுத்திருக்கிறார். ஆக, 228 முறை Aiden கத்தியால் குத்தும்போது 114 முறை Bailey மீது குத்து விழுந்திருக்கிறது. கத்திக் குத்தைத் தடுக்க தன்னால் முடிந்தவரை Bailey போராடியதால், 49 குத்துக்கள் அவரது கையிலும் தலையிலும் விழுந்துள்ளன.
ஒரு முறை குத்தியதில், கத்தியின் முனை உடைந்து Baileyயின் மண்டையோட்டில் பதிந்துவிட்டிருக்கிறது. ஆக, இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் அல்ல, Aiden நன்றாக திட்டமிட்டே இந்தகொடூர செயலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதால், அவரை வயது வந்தவராகவே கருதி வழக்கைத் தொடர்ந்து நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
இதற்கிடையில், Bailey வன்புணரப்பட்டிருக்கிறாரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆக, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள Aidenக்கு, ஜாமீனில் வெளிவர இயலாத ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.