இங்கு என்னப்பா நடக்குது... உம்ரான் மாலிக்கை ஏன் நீக்கினார்களேன்னு தெரியல.. - கேப்டன் எய்டன் மார்க்ரம்
வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை ஏன் திடீரென நீக்கினார்களேன்னு தெரியவில்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
கேப்டன் எய்டன் மார்க்ரம் கருத்து
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது.
இந்நிலையில், உம்ரான் மாலிக் திடீர் நீக்கம் பற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரு தனித்துவம் வாய்ந்த சிறந்த வீரர். அவர் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை எப்படி நீக்கினார்கள்ன்னு தெரியவில்லை. திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைமறைவில் என்ன நடக்கிறது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.