Air Canada விமானத்தில் தொலைபேசி மூலம் டிக்கெட் பதிவு செய்ய கட்டணம் விதிப்பு
Air Canada adds 30 dollars phone booking fee: கனடாவின் மிகப்பெரிய விமான சேவையான ஏர் கனடா புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர் கனடா விமான சேவையில், இனி தொலைபேசி மூலம் விமான டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் 30 கனேடிய டொலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 30 டொலர்
இந்த கட்டணம் அக்டோபர் 15, 2026 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கட்டணம் ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக விதிக்கப்படும்.
உதாரணமாக, நான்கு பேர் கொண்ட குடும்பம் தொலைபேசியில் டிக்கெட் பதிவு செய்தால் மொத்தம் 120 டொலர் செலுத்த வேண்டியிருக்கும்.
“எங்கள் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பயணிகள் எளிதாக டிக்கெட் பதிவு செய்யலாம். இது காத்திருக்கும் நேரத்தை குறைத்து, தொலைபேசி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகளுக்கு கவனம் செலுத்த உதவும்” என்று ஏர் கனடா தெரிவித்துள்ளது.
இந்த கட்டணம் Aeroplan reward bookings-க்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்ததாகவும், இது விமானத் துறையில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையுடன் ஒத்துப்போகிறது என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.
யாருக்கு விலக்கு
ஆனால், சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகள் (உதாரணம்: மாற்றுத்திறனாளிகள்) இந்த கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவார்கள்.
மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ரத்து, தாமதம் அல்லது மாற்றம் காரணமாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தாது.
கடந்த ஏப்ரல் மாதம், ஏர் கனடா சர்வதேச பயணங்களில் பேக்கேஜ் கட்டணங்களை உயர்த்தியிருந்தது. முதல் பைகள் 90 டொலர், இரண்டாவது பைகள் 120 டொலர் என உயர்த்தப்பட்டது.
இந்த புதிய தொலைபேசி பதிவு கட்டணம் பயணிகளிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்கும் முயற்சி என உதெரிவித்துள்ளனர், ஆனால் மற்றவர்கள் பயணிகளுக்கு கூடுதல் சுமை என விமர்சித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |