ஏர் கனடா விமான விபத்து: கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட குரல் பதிவு
ஏர் கனடா விமான விபத்தின் முக்கிய ஆதாரமான கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு வெளியாகியுள்ளது.
ஏர் கனடா விமான விபத்து
ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க் நகரின் லாகார்டியா(LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது விமானத்தில் 72 பயணிகள் மற்றும் 4 பணியாளர் என மொத்தம் 76 பேர் இருந்துள்ளனர்.

விபத்தில் விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்த நிலையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மற்ற 74 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 41 பேர் காயங்களுடன் குயின்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடுக்கிடும் குரல்பதிவு
விபத்தை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், முக்கிய ஆதாரமான குரல்பதிவு வெளியாகியுள்ளது.
இரவு 11:38 மணியளவில் விபத்துக்கு சற்று முன்னதாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தீயணைப்பு வாகனத்தை உடனடியாக நிறுத்தும்படி கத்துகிறார்.

அந்த குரல் பதிவில், "நில்லுங்கள், டிரக் 1 நில்லுங்கள்! உடனே நில்லுங்கள்!" என அவர் பலமுறை கத்திய சத்தம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலியும் கேட்கிறது.
விபத்துக்கு பிறகு, தீயணைப்பு வாகனத்தை நிறுத்துமாறு கத்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (Air Traffic Controller) தன்னுடைய சக அதிகாரி ஒருவரிடம், "ஆமாம், நான் பார்த்தேன். நான் இங்கேதான் இருந்தேன். ஏற்கனவே ஒரு அவசரச் சூழலைக் கையாண்டு கொண்டிருந்தோம். நான் பெரிய தவறு செய்துவிட்டேன் (I messed up)" என தழுதழுத்த குரலில் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |