நடுவானில் வெடித்த ஏர் பிரான்ஸ் விமானத்தின் எஞ்சின்: மரண பயத்தைக் காட்டிய சம்பவம்
ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றின் எஞ்சின் நடுவானில் வெடித்த சம்பவம், பயணிகளுக்கு மரண பயத்தைக் காட்டியது.
நடுவானில் வெடித்த விமானத்தின் எஞ்சின்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து கோர்சிகா தீவுக்குப் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றின் எஞ்சின் ஒன்று நடுவானில் வெடித்ததால் விமானம் 30,000 அடி கீழே வேகமாக பாய்ந்துள்ளது.

34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட செங்குத்தாக பாய்ந்து 5,000 அடியை எட்டியுள்ளது.
வெடிச்சத்தம் கேட்க, எஞ்சினில் தீப்பற்றியதையும் கண்ட பயணிகள், அவ்வளவுதான், விமானம் விழுந்து நொறுங்கப்போகிறது, எல்லாம் முடிந்தது என்றே முடிவு செய்துள்ளார்கள்.
தன் மகளுடன் விமானத்தில் பயணித்த கிறிஸ்டல் என்னும் பெண், விமானத்தின் இறக்கையில் தீ எரிவதைக் கண்டதாகவும், தாங்கள் திகிலடைந்ததாகவும், அருகில் இருந்த ஒரு நபர், விமானம் விழுந்து நொறுங்கப்போவதாக எண்ணி தன் பிள்ளைகளை இறுக அணைத்துக்கொண்டதை தான் கண்டதாகவும் தெரிவிக்கிறார்.
ஜோயெல் என்னும் ஒரு பெண், விமானம் விழுந்து நொறுங்கப்போவதாக எண்ணி, தன் மகளை மொபைலில் அழைத்து, நான் இறக்கப்போகிறேன் என புலம்பியதாக தெரிவிக்கிறார்.

இந்நிலையில், விமானத்தின் விமானி விமானத்தை Lyon விமான நிலையத்துக்கு திருப்பி விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றாலும், மறக்கமுடியாத இனிமையான ஒரு சுற்றுலாவுக்காக கோர்சிகா தீவுக்கு புறப்பட்ட மக்கள், தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு திகில் சம்பவத்தை சந்தித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |