ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி
எபோலா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் விமானம் தரையிறங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
எபோலா வைரஸ் பரவல்
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், இதுவரை 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத்தை பிற நாட்டு பயணிகள் தவிர்த்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளும் தீவிர பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கடந்த 21 நாட்களுக்குள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் யாரும் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நோக்கி புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் அதிகாரிகளில் அலட்சியமான கண்காணிப்பு காரணமாக காங்கோ நாட்டு பயணி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கண்டுபிடித்த அமெரிக்க அதிகாரிகள், விமானத்தை அமெரிக்காவிற்குள் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டது.
விமான பாதை மாற்றப்பட்டத்தை அறிந்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பு கருதி முக கவசங்களை அணிந்து கொண்டனர்.
பின்னர் கனடாவின் மாண்ட்ரியல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து காங்கோ பயணி கீழே இறக்கப்பட்டு அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் பரிசோதனைக்கு பிறகு கனடாவில் தரையிறக்கப்பட்ட விமானம், மீண்டும் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு புறப்பட்டு சென்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |