பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்
பிரித்தானிய அரசு, வெளிநாட்டு பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் invite-only எனும் புதிய வதிவிட விசா திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டத்தின் படி, குறைந்தது 5 மில்லியன் பவுண்டு முதலீடு செய்யும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வதிவிட அனுமதி வழங்கப்படும்.
பின்னர், நிரந்தர வதிவிடத்திற்கான வாய்ப்பும் கிடைக்கும். அவர்களுக்கு முக்கியமான துறைகளான Artificial Intelligence (AI), தொழில்நுட்பம், clean energy, Life Science போன்ற துறைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும்.
முன்பு இருந்த Tier-I Investor Visa திட்டம் 2022-இல் பணமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

புதிய திட்டம், அதனை மாற்றும் வகையில், அதிக கட்டுப்பாடுகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும்.
இந்த விசாவிற்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. UK Office for Investment துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்படும். குடும்பத்தினரும் (மனைவி, குழந்தைகள்) இதில் சேர்க்கப்படுவர்.
இந்த திட்டம், இந்திய பணக்காரர்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கும், உலகளாவிய வணிக குடும்பங்களுக்கும் பெரும் வாய்ப்பாக இருக்கும்.
சொத்து முதலீடுகள் (Property Investment) இதில் சேர்க்கப்படாது. வேலைவாய்ப்பு, புதுமை, பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி பங்களிப்பு செய்யும் முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKVisa #InvestorVisa #GlobalInvestors #ImmigrationNews #CleanEnergy #ArtificialIntelligence #IndianInvestors #UKResidency