இந்த தகுதி இருந்தால் போதும்; எந்த நாட்டிலும் ரூ.1,16,000 வரை சம்பாதிக்கலாம் தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த வேலையை செய்வார்கள். ஒரு சிலர் பிடிக்காமல் இருந்தாலும் கை நிறைய சம்பளம் கிடைப்பதால் செய்வார்கள்.
அதில் பெண்களுக்கு ஒரு சில வேலைகளும் ஆண்களுக்கு ஒரு சில வேலைகளும் வரையறுக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் தற்போது அனைத்து வேலையையும் ஆண்களும் பெண்களும் சமமாக செய்து வருகின்றன.
அந்தவகையில் தற்போது பெண்களுக்கு விமான பணிப்பெண்ணாக தொழில் புரிவதில் அதீத ஆசை இருக்கும்.
பெண்கள் பலருக்கும் மிகவும் பிடித்த பணிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த பணிக்கு சிறந்த ஊதியம் மட்டுமின்றி, வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.
எனவே விமான பணிப்பெண்ணாக நீங்களும் மாற வேண்டுமென்றால் உடனே இந்த தகுதி குறித்தும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் குறித்து விளக்கமாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
விமான பணிப்பெண் தகுதி
தற்போது பல பெண்களும் விமான பணிப்பெணாக தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில், பல பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் கல்வி ரீதியாக மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது. உடல் ரீதியாகவும் நீங்கள் ஒரு சில விடயங்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்ற பிறகு விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மொழித்திறனும் இருக்க வேண்டும். அதாவது தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி சரளமாகப் பேசும் திறன் இருக்க வேண்டும். இது மட்டுமன்றி வெளிநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தால் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என அதில் பணிப்புரியும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
முதல் கூறியதை போலவே கல்வி தகுதி மட்டும் போதுமானதில்லை. நீங்கள் உயரம் எடை என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு பெண் 5.5 அடி உயரமும் உடல் எடை 55 முதல் 60 கிலோ வரையும் இருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பெண்களும் நிறம் மற்றும் உணவுமுறை, வாழ்க்கை முறை, உடை ஆகியவை குறித்து நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
2024 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் பணிபுரிவோரின் சம்பளம் மாதத்திற்கு 40,671 முதல் 2,09,273 வரை கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
சராசரி சம்பளம் ரூ.1,16,000ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலானது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |